search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசில் புகார்"

    • மர்ம நபர் கைவரிசை
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த மழையூர் கூட்டு சாலையை சேர்ந்தவர் மகாதேவன் (வயது 55). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக உள்ளார். இந்த நிலையில் அவர் கோவிலில் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலில் இருந்து வெளியே வந்தார்.

    அப்போது மர்ம நபர் ஒருவர் மகாதேவனின் கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதுகுறித்து மகாதேவன் வட வணக்கம் பாடி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • 10-ம் வகுப்பு படித்து வந்தார்
    • போலீசார் தேடி வருகின்றனர்

    வந்தவாசி:

    வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த வியாழக்கிழமை கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

    இதையடுத்து அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து இவரது தந்தை வந்தவாசி வடக்கு போலீசில் புகார் அளித்தனர்.

    இதன்பேரில் வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப் பதிந்து காணாமல் போன பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.

    • ரேகா சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
    • மணிதேவன் தனது தங்கையை காணவில்லை என தியா கதுருகம் போலீசில் புகார் அளித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் உதயமா ம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 43), இவரது மகள் ரேகா (22)/ இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை எழுந்து பார்த்த போது இவரை காணவில்லை. அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சுப்பிரமணியன் மகன் மணிதேவன் (28) என்பவர் தனது தங்கையை காணவில்லை என தியா கதுருகம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவாஜி மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.
    • ரூ.15 லட்சம் கமிஷனுக்காக ரூ.35 லட்சத்தை விவசாயி இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மொடக்குறிச்சி:

    தேனி மாவட்டம் உத்தம பாளையம் தாலுக்கா சின்ன ஓலாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சிவாஜி (67). விவசாயி. இவரிடம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள காலப்பன்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த பாண்டி (50) என்பவர் அறிமுகமானார்.

    இவர் சிவாஜியிடம் ஈரோட்டில் எனக்கு தெரிந்த ஒருவரிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் உள்ளன. 35 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் அவர் 50 லட்சம் ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் வழங்குவார் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளார்.

    இதனை நம்பிய சிவாஜி 35 லட்சம் ரூபாய் கொடுத்தால் தனக்கு கமிஷனாக ரூ.15 லட்சம் கிடைக்கும் என்ற ஆசையில் தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.35 லட்சத்தை எடுத்து வந்தார்.

    பணத்தை கொண்டு வந்த சிவாஜியிடம் பாண்டி ஒரு செல்போன் எண்ணைக் கொடுத்து ஈரோட்டில் உள்ள ராஜ்குமார் என்பவரை தொடர்பு கொள்ளுமாறு கூறி உள்ளார். அதன்படி சிவாஜியும் ராஜ்குமாரிடம் செல்போனில் பேசி உள்ளார். அப்போது ராஜ்குமார் பணத்தை ஈரோட்டுக்கு கொண்டு வரும்படி கூறி உள்ளார். இதையடுத்து சிவாஜி ஒரு பேக்கில் ரூ.35 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு காரில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதிக்கு வந்தார்.

    மேலும் அவர் தன்னுடன் செந்தில், மாதேஸ்குமார் ஆகியோரை அழைத்து வந்தார். காரை குபேந்திரன் என்பவர் ஓட்டி வந்தார். சின்னமனூரில் காலை 6 மணிக்கு பணத்துடன் புறப்பட்ட இவர்கள் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள லக்காபுரம் பரிசல்துறை நால்ரோட்டிற்கு மதியம் 1.30 மணி அளவில் வந்தனர்.

    பின்னர் அவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் அமர்ந்து ராஜ்குமாரை தொடர்பு கொண்டனர். பின்னர் மதியம் 2 மணி அளவில் ராஜ்குமார் என்பவர் 2 நபர்களுடன் காரில் டீக்கடைக்கு வந்தார். அவர் சிவாஜியை சந்தித்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரூ.50 லட்சம் தனது காரில் இருப்பதாக தெரிவித்தார்.

    மேலும் சிவாஜி, செந்தில் ஆகியோரை ரூ.35 லட்சம் பணத்துடன் தனது காருக்கு அழைத்து சென்றார். பின்னர் பணத்தை எண்ணி சரிபார்க்கலாம் என்று கூறி பரிசல்துறை நால் ரோட்டில் இருந்து திண்டல் ரிங் ரோட்டில் அழைத்து சென்றனர். அப்போது இவர்கள் சென்ற காரை எதிரே வந்த ஒரு கார் வழி மறித்து நிறுத்தியது. அந்த காரில் இருந்து இறங்கிய 4 பேர் நாங்கள் அரசு அதிகாரிகள் என்று கூறி வாகனத்தை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.

    பின்னர் அவர்கள் காரில் இருந்து சிவாஜி, செந்தில் ஆகியோரை கீழே இறங்க சொன்னார்கள். அவர்களும் காரில் இருந்து இறங்கி னார்கள். பின்னர் காரில் இருந்த ரூ.35 லட்சத்துடன் 2 கார்களும் பெருந்துறை நோக்கி சென்றது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிவாஜி ராஜ்குமாரை தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதேபோல் ராஜ்குமாரை அறிமுகம் செய்து வைத்த பாண்டியை தேடி சிவாஜி உசிலம்பட்டி சென்றார். அப்போது பாண்டியும் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு தலைமறைவாகி இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவாஜி மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.15 லட்சம் கமிஷனுக்காக ரூ.35 லட்சத்தை விவசாயி இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தனம் அரியலூரைச் சேர்ந்த மணிகண்டனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • மணிகண்டன், மது அருந்திவிட்டு, தனம் மற்றும் அவரது தாயாருடன் சண்டை போட்டு, ஆபாசமாக திட்டி, தனத்தை மரக்கட்டையால் தாக்கினார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் போலகம் பகுதி யைச்சேர்ந்தவர் தனம் (வயது32). இவர் அரியலூரைச்சேர்ந்த மணிகண்டன் (36) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நிவாஸ் (8), ஸ்ரீநிதி (3) என்ற 2 குழந்தைகள் உள்ளது. திருமணத்திற்கு பிறகு இருவரும், தனம் தாய் வீட்டில் வசித்து வந்தனர். மணிகண்டன் கடந்த சில மாதமாக மனைவி தனம் மீது சந்தேகப்பட்டு, அடிக்கடி தனம் மற்றும் அவரது தாயாருடன் சண்டை போட்டுவந்ததாக கூறப்படுகிறது.

    சமபவத்தன்று வழக்கம் போல் மணிகண்டன், மது அருந்திவிட்டு, தனம் மற்றும் அவரது தாயாருடன் சண்டை போட்டு, ஆபாசமாக திட்டி, தனத்தை மரக்கட்டையால் தாக்கினார். இதில் காயம் அடைந்த தனம் சப்தம் போடவே, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் விலக்கிவிட்டனர். தொடர்ந்து, மணிகண்டன், உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கொலைமிரட்டல் விடுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

    காயம் அடைந்த தனம், திரு.பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று, மேல்சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்ச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு, அவர் கொடுத்த புகாரின் பேரில், திரு.பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மணி கண்டனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    • தீட்சிதர்கள் மீது சிதம்பரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதியிடம் சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா புகார் அளித்தார்.
    • சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களின் செயலர் சிவராம தீட்சிதர் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் புகார் அளித்தார்.

    சிதம்பரம்:

    இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது சிதம்பரம் போலீசில் தீட்சிதர்கள் புகார் அளித்துள்ளனர்.

    சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபையின் மீது ஏறி தரிசனம் செய்ய 4 நாட்களுக்கு அனுமதி இல்லை என வைக்கப்பட்டிருந்த பதாதைகளை அகற்ற கோரியதற்கு மறுப்பு தெரிவித்து தன்னை மிரட்டியதாக தீட்சிதர்கள் மீது சிதம்பரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதியிடம் சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா புகார் அளித்தார்.

    அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையரின் உத்தரவுப் படி சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சிறப்பு பணிக்காக கடந்த 24-ந்தேதி சென்றேன்.

    அப்போது ஜூன் 24, 25, 26 மற்றும் 27-ந்தேதிகளில் கனக சபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்ற பதாதையை பொது தீட்சிதர்களால் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்ததை கண்டேன்.

    நான் அந்த பதாதையை அகற்ற கோரிய போது தீட்சிதர்கள் மறுத்து விட்டனர். இதனை தொடர்ந்து வருவாய் துறை, போலீசாருக்கு புகார் தெரிவித்து அவர்களின் உதவியுடன் பதாதையை அகற்ற முயன்ற போது என்னை பணி செய்ய விடாமல் தடுத்தனர்.

    மேலும் என்னை பொது தீட்சிதர்களின் செயலர் மற்றும் இதர தீட்சிதர்கள் மிரட்டும் தோணியில் பேசினார்கள். எனவே எனது பணியை செய்ய விடாமல் இடையூறாக இருந்த பொது தீட்சிதர்களின் செயலர் மற்றும் இதர தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பதாதைகளை அகற்றியும், அரசாணைப்படி பொதுமக்கள் மீண்டும் கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இது போல் சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களின் செயலர் சிவராம தீட்சிதர் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் புகார் அளித்தார்.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன உற்சவம் நடைபெற்று வரும் நிலையில் ஜூன் 24 முதல் 4 நாட்களுக்கு கனகசபையில் பக்தர்கள் ஏறி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என தற்காலிக அறிவிப்பு பதாதை வைக்கப்பட்டது.

    இது குறித்து தர்சன் தீட்சிதர் மற்றும் ஜெயஷீலா ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், தாசில்தார், போலீசார் எங்களிடம் விசாரித்த போது உரிய முறையில் விளக்கம் அளித்தோம்.

    ஆனால் கோவில் பூஜை விதிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் தில்லை காளியம்மன் கோவில் செயல் அலுவலரது உதவியாளர் அறிவிப்பு பதாதையில் இருந்த வாசகங்களை தன்னிச்சையாக அழித்தார்.

    இது தொடர்பாக அறநிலையத்துறை செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடந்த 14-ந் தேதி அன்று எனது மகன் மதிய உணவு இடைவேளையில் உணவு சாப்பிட்டுவிட்டு கழிப்பறைக்கு சென்று விட்டு வந்துள்ளான்.
    • சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க 20-ம் தேதி பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்தேன்.

    இரணியல்:

    இரணியல் அருகே உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் வீட்டில் சோர்வாக காணப்பட்டுள்ளான்.

    இது பற்றி அவனது தந்தை விசாரித்தபோது, மாணவனுக்கு பள்ளி ஆசிரியர் ஓருவர் செக்ஸ் தொல்லை கொடுத்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதுகுறித்து மாணவனின் தந்தை, குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது 13 வயது மகன், அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். அந்த பள்ளியில் பாடம் எடுத்து வரும் 47 வயது ஆசிரியர் ஒருவர் எனது மகனுடன் நட்பாக பழகி வந்துள்ளார். கடந்த 14-ந் தேதி அன்று எனது மகன் மதிய உணவு இடைவேளையில் உணவு சாப்பிட்டுவிட்டு கழிப்பறைக்கு சென்று விட்டு வந்துள்ளான். அப்போது அவர், எனது மகனை ஆய்வுக் கூடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    அங்கு வைத்து அவனை தகாத உறவுக்கு ஈடுபடுத்தி உள்ளார். இதனால் அவனது பிறப்புறுப்பு வீங்கி வலியால் அவதிப்பட்டு வந்தான். இது குறித்து கேட்டபோதுதான் பள்ளி ஆசிரியர் தவறாக நடந்தது குறித்து கூறினான். சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க 20-ம் தேதி பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்தேன். அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.3 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்
    • 4 பேர் கைது

    வேலூர்:

    ஊசூர் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் அருள் (வயது 34). இவர் அரியூரில் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். இந்தநிலையில் சம்பவத் தன்று விடுதிக்கு ஆட்டோ வில் 4 பேர் வந்தனர். விடுதிக்குள் புகுந்த அவர்கள் பணம் கேட்டு அருளை மிரட்டினர்.

    அவர் பணம் இல்லை என்று கூறியதால் கத்தியை காட்டி மிரட்டி, அவரை தாக்கி ரூ.3 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து அவர் அரியூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அவரிடம் பணத்தை பறித்துச் சென்றது, அரியூரை சேர்ந்த அப்பு என்ற ரோஹித்குமார் (33), சுரேஷ்பாபு (37), சிவக்கு மார் (33), லோகேஷ் (23) ஆகி யோர் என்பது தெரியவந்தது.

    அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • பாபு கடந்த 14-ந்தேதி பாபு கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.
    • வீட்டிற்கு சென்றபோது வீட்டிலிருந்த பாபுவின் மகள் திடீரென காணாமல் போனார்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை சின்னூர் வடக்கு பகுதியை சேர்ந்த வர் பாபு மீனவர். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 14-ந்தேதி பாபு கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். பின்னர் மீன்பிடித்து விட்டு மாலை கரைக்கு திரும்பினார். இதனையடுத்து வீட்டிற்கு சென்றபோது வீட்டிலிருந்த பாபுவின் மகள் திடீரென காணாமல் போனார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாபு மகளை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் மகள் கிடைக்கவில்லை. இதுகுறித்து பாபு பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலூர் ஜெயிலில் அடைத்தனர்
    • தலைமறைவாக உள்ளவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்

    வேலூர்:

    வேலூர் வேலப்பாடியை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவரது கணவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இந்த நிலையில் இளம்பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கள்ளத்தொடர்பை கைவிடுமாறு சதீஷின் மனைவி வற்புறுத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வேலப்பாடி பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த இளம்பெண்ணை, சந்துரு, முனீஸ், ஆகாஷ், விஜய், ராமு மற்றும் சதீஷ் மனைவி ஆகியோர் சேர்ந்து கைகளால் தாக்கியதுடன், பாலியல் தொல்லை கொடுத்தனர். இதுகுறித்து இளம்பெண் வேலூர் தெற்கு போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முனீஸ் மற்றும் சதீஷ் மனைவி ஆகிய 2 பேரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் தலைமறைவாக உள்ளவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • மர்ம நபர் 4 பவுன் நகையை திடுடி சென்றார்.
    • மூதாட்டி ஒலக்கூர் போலீசில் புகார் செய்தார்.

    கடலூர்:

    சேத்தியாதோப்பு அருகே வடகிரிராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி ஜெயசெல்வி (வயது 52) இவர் கடந்த 24-ந்தேதி வீட்டிலிருக்கும்போது அங்கு வந்த மர்ம நபர் ஏ.டி.எம் ல் பணம் எடுத்து தருவதாக கூறி நூதன முறையில் ஜெயசெல்வியிடருந்து 4 பவுன் நகையை திடுடி சென்றார்.

    இதுகுறித்து மூதாட்டி ஒலக்கூர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் சேத்தியாதோப்பு டி.எஸ்.பி ரூபன்குமார் வழக்குபதிவு செய்து மர்ம நபரை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று இரவு சேத்தியாதோப்பு பஸ் நிலையம் அருகே போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார். இதனால் போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று அந்த நபரிடம் கிடுக்குப்பிடி விசாரணை செய்ததில் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த ஆசைகுமார் (வயது 49) என்பதும் வடகிரிராஜபுரம் பகுதியில் உள்ள மூதாட்டியிடம் இருந்து 4 பவுன் நகையை திருடி சென்றதை ஒப்புகொண்டார்.

    உடனே போலீசார் ஆசைகுமாரின் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் ஆசைகுமார் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • புஞ்சை புளியம்பட்டி அருகே 2 குழந்தைகளுடன் மனைவி மாயமானார் இதையடுத்து கணவர் போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஈரோடு:

    புளியம்பட்டி அடுத்துள்ள பனையம்பள்ளி, கே.வி.கே. நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (34). இவர் ஆயில் மில்லில் பணியாற்றி வருகின்றார்.

    இவரது மனைவி தனலட்சுமி (28). இவர்களுக்கு திவாகர் (11), தியாகு(8) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

    சம்வத்தன்று வழக்கம் போல ராஜேந்திரன் வேலைக்கு சென்றுவிட்டு மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்த போது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன் பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்காததால் புளியம்பட்டி போலீசில் இது குறித்து புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைக்கிராமம் ஊசிமலையை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கவிதா(35).

    இவர்களுக்கு 1 மகன், 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்த கவிதா சம்வத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இது குறித்து கணவர் முருகன் பர்கூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்னர்.

    ×